Tuesday, November 19, 2013

ஏழாமிடத்தில் சனி இருந்தால் என்ன செய்யும் ?

உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனி உள்ளதா ? அல்லது சனி எழில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகுமா ? 






Monday, November 18, 2013

நாட்டை ஆளும் ராஜ யோகம் பெற்ற சாதகமா உங்களுடையது ?



                          ராஜ யோகம் என்பது பல ஜோதிட கிரந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ராஜ யோகம் பெற்ற எல்லாரும் நாட்டை ஆள்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில், அப்படியானால் நாடாளும் ராஜ யோகம் என்பது எப்படி இருக்கும் ? இதற்க்கான பதில் தான் இந்த ஒளிக்காட்சி .



                                             



Thursday, November 7, 2013

சித்திரை மாதம் பிறந்தவரா நீங்கள் ?




            சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும். இது ஒருவருடைய ஜாதகத்தில் யோகமான அமைப்பாகும். ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற ஒரு ஜாதகர் நிச்சயமாக பலபேருக்கும் தெரிந்த புகழ் பெற்றவராக இருப்பார்.

            வெகுசாதாரண நிலையில் ஒரு ஜாதகருடைய பிறப்பு இருப்பினும் அவர் உச்சம் அல்லது ஆட்சி பெற்ற சூரியன் வாய்க்கப் பெற்றால் அவருடைய வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்பது திண்ணம்.

                                                                                 







Monday, November 4, 2013

வாகன யோகம்



                        "  வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்  " என்பது பழமொழி, ஒருவர் நல்ல வசதியான வீட்டில் வசிப்பதற்கும் மற்றொருவர் அதே தெருவில் நடைபாதையில் வசிப்பதற்க்குமான காரணம் என்ன ? என்பதையும் கார் வாங்கும் யோகம் உள்ளதா ? யாருக்கெல்லாம் சொந்த காரில் செல்லும் யோகம் கிடைக்கும் என்பதனையும் அறியும் ஒரு சிறு முயற்சியே இந்த பதிவாகும்.












ராஜ யோகம் Part I



                        ஜனன ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மூன்றாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் ஒன்று சேர்ந்து இருந்தால் அது ராஜ யோகமாகும்.இந்த கிரக சேர்க்கையில் குறிப்பாக பத்தாம் வீட்டு அதிபதி திசையில் ராஜ யோகத்தை உருவாக்கும். பின்வரும் ஹைதர் அலி ஜாதகத்தில்  மூன்றாம் அதிபதியான குருவும் பத்தாம் அதிபதியான சந்திரனும் ஒன்று சேர்ந்து லக்னத்திற்கு இரண்டாமிடமான விருச்சிகத்தில் அமர்ந்து உள்ளனர். இந்த ஜாதகத்தில் பத்தாமிடத்ததிபதியான சந்திரன் திசையில் ஹைதர் அலிக்கு ராஜயோகம் கிடைத்தது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. சக்ரவர்த்தியாக ராஜ பரிபாலனம் செய்தவர் செவ்வாய் திசையில் அவருடைய ஆயுளை முடித்துவைத்தது.

                           சந்திர திசை ஏன் யோகம் தந்தது ?  செவ்வாய் திசையில் ஆயுள் முடிந்தது எவ்வாறு ? என்பதை விளக்குவதே பின்வரும் ஒளிக்காட்சி !!




Sunday, November 3, 2013

செவ்வாய் தோஷம்



                           செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். பொதுவாகவே லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற 2,4,7,8 மற்றும் 12 ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. ஆனால் இந்த இடங்களில் செவ்வாய் இருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்று முடிவு செய்வது மிக அபத்தமானது.

                             பல்வேறு வகையான விதி விலக்குகள்  இந்த செவ்வாய் தோசத்திற்க்கு உள்ளது. யாருக்கெல்லாம் தோஷம் உண்டு யாருக்கு இல்லை என்பதைப்பற்றியும், செவ்வாய் தோஷம் என்பது ஆயுள் கண்டத்தை தருமா என்பது பற்றியும் விளக்குவதே இந்த ஒளிக்காட்சி.





                                                                        

Friday, November 1, 2013

அதி யோகம்

               

                                                            
                                                                                    



                           ஒவ்வொரு ஜாதகத்திலும் கிரக சேர்க்கையானது பலவிதமான யோகங்களை உருவாகுகிறது, இந்த யோகங்கள் சாதாரணமான மனிதர்களையும் மிக அசாதரணமான செயல்களை செய்ய வைத்துவிடுகிறது.  ஆதி ஜோதிட கர்த்தாக்கள் இந்த யோகங்கள் செயல்பாடுகளை மிக சிறப்பாக வர்ணித்து உள்ளார்கள். அவற்றுள் குறிப்பிடப்படும் ஒரு முக்கியமான யோகம் அதி யோகம் என்பது ஆகும்.

                       அதி யோகம் என்பது ஒரு சிறப்பான யோகமாகும், இந்த யோகம் உள்ளவர்கள் அஷ்டம சனி போன்ற கடுமையான காலங்களில்கூட மிக கடுமையான பலன்களில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அதேபோல அஷ்டமாதிபதி திசை மற்றும் புத்தி காலங்களில் பெரியதாக ஒன்றும் வதைப்பது இல்லை. 


                       ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் கட்டத்திலிருந்து ஆறு, ஏழு அல்லது எட்டாவது கட்டத்தில் சுப கிரகங்கள் நிற்பது அதி யோகம் எனப்படும். இம்மாதிரியான ஜாதகர்களுக்கு என்னதான் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடந்தாலும் அவர்கள் அந்த பாதிப்பிலிருந்து எளிமையாக விடுபட்டு விடுவர் என்பது இந்த யோகத்தின் சிறப்பாகும்.