Thursday, May 8, 2014

பெண்களுக்கும் தார தோஷம் உண்டா ?

                                


                                      ஆண்களுக்கு திருமணம் ஆகவில்லையா ? அவருடைய ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது எனவே கால தாமதமாக திருமணம் செய்யுங்கள். அப்போது மறு திருமண யோகம் என்னும் இரண்டாவது விவாகத்தை தடுத்து விடலாம் என ஜோதிடர்கள் சொல்கின்றனர். இதே போல பெண்கள் ஜாதகத்திலும் திருமண தோஷம் இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்கும் என்று சொல்ல வழி உண்டு. பின்வரும் உதாரண ஜாதகத்தில் லக்னம் மேஷம் ராசி மிதுனம் இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரனே எழாமிடத்து அதிபதியாகவும் வருவதோடு மட்டுமல்லாமல் களத்திர காரகனாகவும் உள்ளார். ஆக மூன்று வகையான முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த சுக்கிரன் உதாரண ஜாதகத்தில் நீசம் பெற்ற நிலையில் உள்ளார். 



                                                     பெண்களின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் என்பது எட்டாமிடமாகும். இந்த எட்டமிடத்தை சனீச்வர பகவான் தனது பத்தாம் பார்வையாக பார்கிறார். அதே இடத்தை செவ்வாய் தனது ஏழாம் பார்வையாக பார்கிறார். ஆக சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒரு ராசியில் விழுமானால் அந்த இடமானது நசிந்துவிடும் என்பது ஜோதிட கூற்றாகும். இங்கு சனி செவ்வாய் பார்வை மாங்கல்ய ஸ்தானத்தில் விழுவதால் இந்த பெண்ணிற்கு இரண்டு முறை திருமணம் முடிந்து மூன்றாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு உள்ளார்கள்.

                                                          எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானமும் கூட இந்த பெண்ணிற்கு இள வயது என்பதால் ஆயுளில் தோஷம் ஏற்ப்படுத்தவில்லை.மாறாக இருமுறையும் மாங்கல்ய தோஷத்தை ஏற்ப்படுத்தி விட்டது. இந்த மாதிரியான ஜாதகங்கள் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்க வந்தால் இது பொருத்தம் இல்லை என்று கூறும் நிலைக்கு ஜோதிடர்கள் வந்து விடுவர். ஆனால் பொருத்தம் பார்க்க வந்தவர்களோ நாங்கள் பார்த்த பக்கம் இந்த இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளது அதிலும் பத்து பொருத்தமும் உள்ளது எனவே நல்ல முறையில் திருமணம் செய்யலாம். என்று கூறுகின்றனர். இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்பதே ஒரு கலையாகி விடுகிறது.

                                       




                                                                                             

1 comment:

Unknown said...

sir ur explaining way is like teacher and good too....
will u explain next topic about who will get govt job and who will get work abroad....

Post a Comment